"பள்ளியை திறக்கக் கோரி கடிதம் எழுதிய சிறுமிக்கு செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா இரண்டாம் அலையால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வருக்கு ஓசூரை சேர்ந்த சிறுமி விரைவில் பள்ளிகளை திறக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், அந்த சிறுமிக்கு செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு முதல்வர் உரையாடியுள்ளார். இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஓசூர், டைட்டன் டவுன்ஷிப்பைச் சேர்ந்த ரவிராஜன்- உதயகுமாரி ஆகியோரின் மகள் பிரஜ்னா அவர்கள், பள்ளிகளைத் திறக்கும்படி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார்.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அவரது தொலைபேசி எண்ணிற்கு இன்று (15.10.2021) தொடர்புகொண்டு பேசிய முதலமைச்சர், நவம்பர் 1-ஆம் நாள் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அப்படித் திறக்கப்படும்போது அம்மாணவி பள்ளிக்குச் செல்லலாம்-கவலைப்பட வேண்டாம் என்றும் கூறியதோடு, ஆசிரியர்கள் கூறுவதைக் கேட்டு தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிந்துகொள்ளுதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தி, நன்றாக படிக்க வேண்டும் என்று வாழ்த்தினார்."

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.