‘நேர்மையே வாழ்க்கையின் வழி’ என்பதை நோக்கமாகக் கொண்டு ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2021’ அக்.26 முதல் நவ.1 வரை கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, ‘என்எல்சி இந்தியா’ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழோடு இணைந்து பள்ளி மாணவ - மாணவிகளிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கில் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில், இந்தஆண்டு ‘சுதந்திர இந்தியா@75: நேர்மையுடன் கூடிய தன்னம்பிக்கை’ எனும் கருப்பொருளில் ஊழல் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் நோக்கில் விநாடி வினா போட்டியை நடத்துகின்றன.
இப்போட்டியில் 5 முதல் 8-ம் வகுப்பு மாணவ - மாணவிகள் ஜூனியர் பிரிவிலும், 9 முதல் 12-ம்வகுப்பு மாணவ - மாணவிகள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம். ஜூனியர்களுக்கான போட்டி அக்.24காலை 10 முதல் 12 மணி வரையிலும், சீனியர்களுக்கான போட்டி அக்.24-ம் தேதி மாலை 2 முதல் 4 மணி வரையிலும் நடைபெறும். இந்தப் போட்டியில் பங்கேற்க https://www.htamil.org/00074 என்ற லிங்க்கில் பதிவு செய்தால், போட்டிகுறித்த விவரங்கள் ஆன்லைன் இணைப்பில் வழங்கப்படும். பங்கேற்க பதிவுக் கட்டணம் எதுவும் இல்லை.
போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கு இ-சான்றிதழ் வழங்கப்படும். பதிவுசெய்ய கடைசி நாள் அக்.22. இப்போட்டியின் நாலெட்ஜ் பார்ட்னராக ‘எக்ஸ் க்யூஸ் ஐடி’ இணைந்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 82487 51369 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.