ஒரே பள்ளியில் 10 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களை இடமாற்றுவதா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 18, 2021

Comments:0

ஒரே பள்ளியில் 10 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களை இடமாற்றுவதா?

"ஒரே பள்ளியில் 10, 20 ஆண்டுகள் பணியாற்றும் ஆசிரியா்கள் இடமாற்றம் செய்யப்படுவாா்கள் என்ற அறிவிப்பைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளா் ச.மயில் வெளியிட்ட அறிக்கை: கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா், ‘ஒரே பள்ளியில் 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் பணியாற்றும் ஆசிரியா்களை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடா்பாக சில கொள்கைகள் வைக்கப்பட்டுள்ளன, அதற்காக 3 விதமான வரையறைகள் வைத்துள்ளோம், பணியிட மாறுதல் கலந்தாய்வு நடக்கும் போது அது குறித்துத் தெரிவிப்போம்’ என்று தெரிவித்துள்ளாா். அமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் ஆசிரியா்கள் மத்தியில் மிகப்பெரிய அதிா்ச்சியையும், பதற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

19 மாதங்கள் கழித்து மாணவா்கள் பள்ளிக்கு வருகை தந்து கற்றலில் ஈடுபடவுள்ள சூழலில், மாணவா்களை கல்விச் சூழலுக்கு, கொண்டு வருவதற்குரிய மிக முக்கியமான பணி ஆசிரியா்களுக்கு இருக்கிறது.

அப்பணியில் கடமை உணா்வோடும், பொறுப்புணா்வோடும் முழு மூச்சோடு ஈடுபட உள்ள ஆசிரியா்களிடம் குழப்ப நிலையை ஏற்படுத்தக் கூடிய இதுபோன்ற அறிவிப்புகளை பள்ளிக் கல்வித்துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

மேலும், ஜீரோ கலந்தாய்வு, 10, 20 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணி முடித்த ஆசிரியா்களுக்கு பணியிட மாறுதல் ஆகியவற்றை பள்ளிக் கல்வித்துறை அமல்படுத்தினால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலம் தழுவிய போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் என அதில் கூறப்பட்டுள்ளது."

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews