மின்னணு பணிப் பதிவேட்டை சரிபார்ப்பது (E - SR verification) செய்வது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 18, 2021

Comments:0

மின்னணு பணிப் பதிவேட்டை சரிபார்ப்பது (E - SR verification) செய்வது எப்படி?

*முதலில் ஒரு அல்லது இரண்டு குயர் கோடு போட்ட பெரிய நோட்டு (Long Size) வாங்கிக் கொள்ள வேண்டும்.*


*தரமான தாள்களை கொண்ட பைண்டிங் நோட்டு வாங்குவது நல்லது.*


*பிறகு மேற்கண்ட PDF file ல் உள்ளவாறு, நோட்டின் முதல் இரண்டு தாள்களில், தலைப்பு எழுதிக் கொள்ள வேண்டும்.*


*பிறகு பணிப் பதிவேட்டுன் தொடக்கம் முதல் பக்கம் முதல், கடைசியாக பதிவு செய்யப் பட்ட பக்கம் வரையிலான பதிவுகளை, பணிப்பதிவேட்டில் உள்ளபடி, வரிசை மாறாமல், தற்போது வாங்கிய புதிய நோட்டில், உரிய தலைப்புகளுக்கு ஒதுக்கப் பட்ட பக்கங்களில், எழுத வேண்டும்.*


*அனைத்து தலைப்புகளிலும், பணிப்பதிவேட்டில் உள்ள விவரங்கள், நோட்டில் எழுதப் பட்டுள்ளதா? என சரி பார்க்க வேண்டும்.*


*நம்மிடம் உள்ள ஆவணங்களைக் கொண்டு, பணிப்பதிவேட்டில் அனைத்து விவரங்களும் இன்றைய தேதி வரை சரியாக பதிவு செய்யப் பட்டுள்ளதா? என்பதை சரி பார்க்க வேண்டும்.*


*விடுப்புகள், ஊதிய உயர்வு, ஒப்படைப்பு விடுப்பு, இருப்பில் உள்ள ஈட்டிய விடுப்பு, முதல் பணி நியமனம், தகுதிகாண் பருவம் நிறைவு செய்தல், பதவி உயர்வுகள், பணியிட மாறுதல், பணி விடுவிப்பு & பணியில் சேர்ந்த விவரம், வாரிசு தாரர் நியமனம், குடும்ப விவரம், ஊதிய உயர்வுகள், ஊக்க ஊதியம், தேர்வு நிலை, சிறப்பு நிலை பதிவுகள், உயர் கல்விக்கான முன் அனுமதி, பின்னேற்பு, கல்வித் தகுதிகள், உண்மைத் தன்மை சான்றுகள், போராட்ட கால பதிவுகள் & முறை படுத்துதல் பதிவுகள், ஊதியக் குழுவின் படி ஊதிய நிர்ணய விவரம், பணிக்காலம் சரிபார்த்தல் விவரம் போன்ற அனைத்து விவரங்களும் சரியாக பதிவு செய்யப் பட்டுள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும்.* *நம் நோட்டில் உரிய தலைப்பின் கீழ் எழுதப்பட்ட விவரங்கள் அனைத்தும், மின்னணு பணிப் பதிவேட்டின் நகலில் உள்ளதா என்பதை கவனமாக சரி பார்க்க வேண்டும்.*


*தகவல்கள் ஏதேனும் பணிப் பதிவேடு அல்லது மின்னணு பணிப் பதிவேட்டில் முரண் பட்டாலோ, விடுபட்டிருந்தாலோ, அவற்றை தனியாக குறித்து, உரிய ஆவணங்களுடன் இவற்றை சரிசெய்ய உரிய எழுத்தர் மற்றும் அலுவலர் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.*


*முரண்பட்ட அல்லது விடுபட்ட தகவல்கள் நம் பணிப்பதிவேடு மற்றும் மின்னணு பணிப் பதிவேட்டில் சரி செய்யப் பட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.*


*இவ்வாறு சரி பார்த்த பின், அனைத்து விவரங்களும் சரியாக உள்ளது என கையொப்பமிட்டு வழங்க வேண்டும்.*

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews