தமிழகத்தில் பள்ளிகளில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட மாணவா்கள், ஆசிரியா்கள் விவரங்களை பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்புமாறு தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவல் எண்ணிக்கை படிபடியாக குறைந்த வந்த நிலையில், நீண்ட நாள்களுக்கு பிறகு ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு செப். 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 15-க்கும் அதிகமான மாணவா்களுக்கும், 10-க்கும் அதிகமான ஆசிரியா்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று உறுதியான மாணவா்களின் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்தநிலையில், செப். 1 முதல் 6-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், பள்ளிகளில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்களின் விவரங்களை பள்ளிக்கல்வி இணை இயக்குநா் மின்னஞ்சல் முகவரிக்கு பள்ளி தலைமை ஆசிரியா்கள் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை, பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநா் (தொழிற்கல்வி) பிறப்பித்துள்ளாா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.