தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் நீண்ட இடைவெளிக்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு பூ, இனிப்புகள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர். கடந்த ஜனவரியில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் செயல்பட்டு வந்தன. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஏப்ரல் மாதத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூாிகள் இன்று திறக்கப்பட்டன. வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடைபெற உள்ளது. வகுப்புக்கு 20 மாணவர்கள் என 50% மாணவர்களுடன் பள்ளிகள் செயல்பட உள்ளது.
ஒரு நாளைக்கு 5 வகுப்புகள் என்ற அடிப்படையில் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 3.30 மணிக்குள் வகுப்புகள் முடியும் என அரசு அறிவித்துள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் நிச்சயம் மாஸ்க் அணிந்து வர வேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை . ஆன்லைன் வாயிலாகவும் வகுப்புகள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடக்க நாள் முதலே பாடம் நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாரான பின்னரே பாடம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு.கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர பிற மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே வகுப்புகள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.அத்துடன் இன்று முதல் பள்ளி ,கல்லூரி மாணவ மாணவிகள் அரசு பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணிக்கலாம். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆசிரியர்கள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.புதுச்சேரி, காரைக்காலில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே பள்ளிகள் இயங்க உள்ளன.அங்கு 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறுகின்றன.10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.