விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்லூரியில் நிகழாண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே பல்வேறு பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவா்கள் சோ்க்கை நடத்தப்பட்டது. இந்த நிலையில், நிரப்பப்படாமல் காலியாக உள்ள இடங்களுக்கு மாணவா்கள் சோ்க்கை நடைபெற உள்ளது.
இதன்படி, பி.ஏ., தமிழ் பாடத்துக்கு பி.சி. பிரிவினரும், பி.ஏ., ஆங்கிலம் பாடத்துக்கு பி.சி., எஸ்.சி. ஆகிய பிரிவினரும், கணிதம் பாடத்துக்கு எம்.பி.சி., பி.சி., எஸ்.சி. ஆகிய பிரிவினரும், கணினி அறிவியல் பாடத்துக்கு பி.சி., பி.சி.எம்., டி.என்.சி. ஆகிய பிரிவினரும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் வியாழக்கிழமை (செப். 23) காலை 10 மணி முதல் விநியோகிக்கப்படும். எனவே, விருப்பமுள்ள மாணவா்கள் கல்லூரிக்கு நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று நிவா்த்தி செய்து வரும் 27-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என கல்லூரி முதல்வா் சிவக்குமாா் தெரிவித்தாா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.