பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி 8 இயக்குநர்கள், 18 இணை இயக்குநர்கள் மாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 23, 2021

1 Comments

பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி 8 இயக்குநர்கள், 18 இணை இயக்குநர்கள் மாற்றம்

தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லாஉஷா நேற்று வெளியிட்டுள்ள அரசாணை: இயக்குநர்கள் மாற்றம்: ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் க.அறிவொளி -தொடக்க கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் சேதுராமவர்மா-அரசு தேர்வுகள் இயக்குநராகவும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்கக கூடுதல் இயக்குநர்(2) குப்புசாமி-பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநராகவும், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் இயக்கக இயக்குநர் ராமேஸ்வர முருகன்-ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககத்தின் கூடுதல் இயக்குநராக(1)வும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளர், நாகராஜ முருகன்-ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககத்தின் கூடுதல் இயக்குநராக(2)வும், தொடக்க கல்வி இயக்குநர் பழனிச்சாமி- ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளராகவும், அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர், உஷாராணி- ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராகவும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககத்தின் கூடுதல் திட்ட இயக்குநர்(1), கண்ணப்பன்-தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், செயலாளர் கண்ணப்பன் பொது நூலகத்துறையின் இயக்குராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இணை இயக்குநர்கள் மாற்றம்: பள்ளிக் கல்வி பணியில் வகுப்பு 2 ஐ சார்ந்த இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணியாற்றும் அலுவலர்கள் 18 பேர், நிர்வாக நலன் கருதி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர், நரேஷ்-பள்ளிக் கல்வி (பணியாளர் தொகுதி) இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்கக இணை இயக்குநர், கோபிதாஸ்-பள்ளிக் கல்வி ஆணையரக (இடைநிலைக் கல்வி) இணை இயக்குநராகவும், அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் (மேனிலைக் கல்வி), ராமசாமி-பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநராக (மேனிலைக்கல்வி)வும், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் இயக்கக இணை இயக்குநர், அமுதவல்லி-பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநராகவும் (நாட்டுநலப்பணித் திட்டம்), மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் (நிர்வாகம்) ஜெயக்குமார்-பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநராகவும் (தொழிற்கல்வி), ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர், ஸ்ரீதேவி- மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநராகவும், பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர் (மேனிலைக் கல்வி) குமார்- மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராகவும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் (பயிற்சி), ராஜேந்திரன்-அதே துறையின் நிர்வாக இணை இயக்குநராகவும், பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட இணை இயக்குநர், வாசு- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநில திட்ட இயக்கக இணை இயக்குநராகவும், அதே துறையில் பணியாற்றிய இணை இயக்குநர்(3), உமா- அதே துறையில் இணை இயக்குநர்(2)ஆகவும், ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் பாஸ்கரசேதுபதி- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்கக இணை இயக்குநர்(3) ஆகவும், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநரான சசிகலா-அதே துறையில் நிர்வாக இணை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பாடத்திட்ட இணை இயக்குநர், சாந்தி-தொடக்க கல்வி இயக்கக உதவி பெறும் பள்ளிகள் இணை இயக்குநராகவும், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககத்தின் இணை இயக்குநர்(2), செல்வகுமார்-அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இடைநிலைக் கல்வி, இணை இயக்குநராகவும், அதே துறையில் இடைநிலைக் கல்வி இணை இயக்குநராக இருந்த குமார்-அதே துறையின் மேனிலைக் கல்வியின் இணை இயக்குநராகவும், பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் பணியாளர் தொகுதி இணை இயக்குநர், பொன்னையா-ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கூடுதல் உறுப்பினராகவும், பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் இடைநிலைக் கல்வி இணை இயக்குநராக இருந்த சுகன்யா-ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினராகவும், தொடக் கல்வி இயக்ககத்தின் நிர்வாக இணை இயக்குநராக இருந்த ஆனந்தி- மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இணை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 8 இயக்குநர்கள், 18 இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம்! பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அதிரடி நடவடிக்கை.


CEO-க்கள் பணியிட மாற்றத்துக்குப் பின், பெரிய அளவிலான மாற்றம். பாடநூல் & கல்வியியல் பணிகள் கழக செயலாளராக கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குநராக சேதுராமவர்மா; தொடக்கக் கல்வி இயக்குநராக அறிவொளி நியமனம். மெட்ரிக் பள்ளிகள் இயக்குநராக கருப்பசாமி நீடிக்கிறார். https://kaninikkalvi.blogspot.com/2021/09/blog-post_284.html


https://kaninikkalvi.blogspot.com/2021/09/blog-post_529.html

1 comment:

  1. வட்டார கல்வி அலுவலர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் சூன் மாதத்தில் மாற்றம் கொடுக்க வேண்டும்

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews