WhatsAppல் Delete ஆன செய்திகளை படிப்பது எப்படி? விரிவான விளக்கம் இதோ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 04, 2021

Comments:0

WhatsAppல் Delete ஆன செய்திகளை படிப்பது எப்படி? விரிவான விளக்கம் இதோ!

வாட்ஸ் அப் செயலியில் உள்ள நீக்குதல் அம்சம், பயனர் ஒருவருக்கு அனுப்பிய செய்திகளை அனுப்பியவரின் சாதனத்திலிருந்து நீக்கிய பின்பாக அந்த செய்தி 60 நிமிடங்கள் வரை நீடித்திருக்கிறது. இதன் மூலம் அளிக்கப்பட்ட செய்திகளை 1 மணி நேரத்திற்குளாக அறிந்து கொள்ள முடியும்.

நீக்கப்பட்ட செய்திகள்
வாட்ஸ் அப் செயலியின் பயனர்கள் தற்போது WAMR (recover deleted messages) என்ற பயன்பாட்டின் மூலம் நீக்கப்பட்ட செய்திகளை எளிதாக தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் ஒரு தீர்வை வழங்குகிறது. இதன் மூலம் பயனர் ஒருவர் நீக்கப்பட்ட செய்திகள் மற்றும் அதன் நிலை பதிவிறக்கத்தை மீட்டெடுக்க முடியும். அதாவது வாட்ஸ் அப்பில் உங்களுக்கு அனுப்பப்பட்ட செய்திகளை நீங்கள் வாசிப்பதற்கு முன்பு, செய்திகளை அனுப்பியவர் அவற்றை நீக்கி இருந்தால் உங்களால் திரும்ப பெற்றுக்கொள்ள முடியும். இந்த அம்சம் வாட்ஸ் அப்பின் அப்டேட்டை பதிவிறக்கவும் செய்ததும் கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் WAMR ஐ பயன்படுத்தி இந்த பயன்பாட்டை நிறுவ, கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலிருந்து அறிவிப்புகளைப் பெற விரும்பும் கருவிகளை நீங்கள் தேர்ந்தெடுத்து, பதிவிறக்கம் செய்ய வேண்டும். அது முடிந்ததும், அறிவிப்புகளைப் பெறுவதற்கான அனுமதிகளின் எண்ணிக்கை குறித்து உங்களிடம் கேட்கப்படும். இது அனைத்தும் அமைக்கப்பட்டவுடன், இதுவரை நீக்கப்பட்ட செய்திகள் உட்பட அனைத்து அறிவிப்புகளையும் நீங்கள் காணலாம். மீடியா கோப்புகளை தானாகப் பதிவிறக்கம் செய்துக்கொள்ளும் ஆப்ஷனை நீங்கள் முன்னமே தேர்வு செய்திருந்தால் அவற்றையும் மீட்டெடுக்க முடியும். பின்னர் WAMR செயல்பாடுகள் தொடங்கியதும், வாட்ஸ் அப்பின் தனிப்பட்ட சேட் பாக்சில் நீக்கப்பட்ட எந்த செய்தியையும் நீங்கள் கண்டறியலாம். இந்த நீக்கப்பட்ட செய்திகளைக் காட்ட, அறிவிப்புகளுக்கான (notification) அணுகலை WAMR கேட்கும். அதை வழங்கியவுடன் உங்கள் வாட்ஸ் அப் கணக்கில் உள்நுழையாமல் நீக்கப்பட்ட செய்திகளை மீட்டெடுக்கும் பயன்பாட்டை இது அனுமதிக்கிறது.

அதன் கீழ் நீக்கப்பட்ட புகைப்படங்கள் உட்பட அனைத்து வகையான மீடியா கோப்புகளையும் WAMR ஆல் சேமித்து வைக்க முடியும். இருப்பினும், இந்த அம்சத்திற்கு உங்கள் சாதனத்தில் தானியங்கி மீடியா பதிவிறக்கம் ‘ஆன்’ செய்யப்பட வேண்டும். உங்கள் தொலைபேசியில் உள்வரும் அறிவிப்புகளைப் கண்டுபிடிப்பதற்கு இது செயல்படுவதால், உங்களுக்கு அறிவிக்கப்படாத செய்திகளை WAMR ஆல் பெற்றுத்தர முடியாது. வாட்ஸ் அப்பில் நீங்கள் MUTE செய்துள்ள தனிப்பட்ட அல்லது குழு சேட்களும் இதில் அடங்கும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews