RIESI நிறுவனம் நடத்தும் 30 நாட்கள் ஆங்கில பயிற்சி - ஆசிரியர்களை தேர்வு செய்து பட்டியலை அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 15, 2021

Comments:0

RIESI நிறுவனம் நடத்தும் 30 நாட்கள் ஆங்கில பயிற்சி - ஆசிரியர்களை தேர்வு செய்து பட்டியலை அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!

பெங்களூரு RIESI நிறுவனம் நடத்தும் 30 நாட்கள் இணையவழி பயிற்சி - ஆசிரியர்களை தேர்வு செய்து பட்டியலை அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

புதுடெல்லி Centre for Cultural Resources and Training என்ற நிறுவனத்தால் , அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி / நடுநிலைப் பள்ளி / உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு , " Certificate of Course in English language Teaching " 01.09.2021 முதல் 30.09.2021 வரை 30 நாட்கள் இணைய வழி பயிற்சி பட்டறை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , இக்கடிதத்தில் தொடக்கப் பள்ளி / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் , ஆங்கிலம் பயிற்றுவிக்கும் 25 ஆசிரியர்களும் , உயர்நிலைப் பள்ளி , மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் 25 ஆசிரியர்களும் மொத்தம் 50 ஆசிரியர்களை இணையவழி பயிற்சிக்கு பரிந்துரை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி சார்பான விவரங்கள் மற்றும் ஆசிரியர்களை பயிற்சிக்கு பரிந்துரை செய்யும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் இக்கடிதத்துடன் இணைப்பாக பெறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. எனவே , வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி , பயிற்சியில் கலந்துகொள்ள அரசு / அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி / நடுநிலைப் பயிற்சி சார்பான விவரங்கள் மற்றும் ஆசிரியர்களை பயிற்சிக்கு பரிந்துரை செய்யும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் இக்கடிதத்துடன் இணைப்பாக பெறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

எனவே , வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி , பயிற்சியில் கலந்துகொள்ள அரசு / அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களில் ஒரு ஆசிரியரும் மற்றும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களில் ஒரு ஆசிரியரும் என மொத்தம் தகுதியான 2 ஆசிரியர்களை பரிந்துரை செய்து இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் மென்நகலாக ( Excel file , details in english ) இவ்வலுவலகத்தின் வி 2 பிரிவின் v2sec.tndse@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 16.08.2021 ற்குள் அனுப்புமாறும் , முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட கடிதத்தை விரைவு அஞ்சலில் அனுப்புமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

DSE - RIESI 30 Days English Training Proceedings - Download here

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews