சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முனேற்றத்தேர்வுகள் நேரடி முறையில் வரும் ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்க உள்ளதாகவும், தேர்வின் அட்டவணை நாளை வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி தேர்வுகள்:
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கல்வி வாரியம்10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கான விரிவான மதிப்பீட்டு திட்டத்தை வெளியிட்டுள்ளது. அதில், இதற்கு முன்னர் எழுதிய பொதுத்தேர்வுகள், அலகுதேர்வுகள், இடை பருவத்தேர்வுகள் மற்றும் செய்முறை தேர்வுகள் போன்றவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ கல்வி வாரியம் ஜூலை 30 அன்று 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் 12 ஆம் வகுப்பு முடிவுகளை அறிவித்தது. அதில், மொத்தம் 99.37 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். 99.67 சதவீதம் பெண்கள் மற்றும், 99.13 சதவீதம் ஆண்களும் தேர்ச்சி பெற்றனர். அரசு அறிவித்துள்ள இறுதி முடிவில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு பின்னர் நேரடி தேர்வுகள் நடத்தப்படும் என்றும், அதுவே மாணவர்களின் இறுதி மதிப்பெண்ணாக கணக்கிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 10 மற்றும் 12ம் வகுப்பு தனித்தேர்வர்கள், திருப்தி இல்லாத மாணவர்களுக்கு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை நேரடி தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் முழு அட்டவணை நாளை வெளியிடப்பட உள்ளது. தேர்வு குறித்த அனைத்து தகவல்களையும் cbse.nic.in என்ற அதிகாரபூர்வ தலத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த முறை 19 முக்கிய பாடங்களுக்கு மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10ம் தேதியான நாளை இறுதி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.