காரைக்குடி அழகப்பா பல்கலை புதிய துணைவேந்தர் தேடல் குழுவை கலைத்து மீண்டும் புதிய குழு அமைக்க கவர்னர் பன்வாரிலால் புரோஹகித் உத்தரவிட்டுள்ளார்.
இப்பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன் பதவிக் காலம் முடிந்த பின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடல் குழு சட்டப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சத்தியநாராயணா (கவர்னர் பிரதிநிதி) தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. இதில் மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் பேராசிரியர் மணிவேல் (அரசு பிரதிநிதி), பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் மீனா (செனட் பிரதிநிதி ), சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் துரைசாமி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை முன்னாள் துணைவேந்தர் தங்கசாமி (சிண்டிகேட் பிரதிநிதிகள்) உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர்.
இக்குழு 162 விண்ணப்பங்களை பெற்று பரிசீலனை செய்து ஏழு பேரை நேர்காணலுக்கு அழைத்தது. இவர்களில் மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் உட்பட 3 பேர் பட்டியலை ஆக.,11ல் கவர்னரிடம் சமர்ப்பித்தது. ஆனால் பரிந்துரைத்த மூன்று பேரையும் கவர்னர் ஏற்கவில்லை.
புதிய தேடல் குழுவை அமைக்குமாறு பல்கலை பதிவாளருக்கு கவர்னர் செயலாளர் ஆனந்தராவ் வி.பட்டீல் கடிதம் அனுப்பியுள்ளார். விரைவில் மீண்டும் புதிய துணைவேந்தர் தேடல் குழு அமைக்கப்படவுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.