Breaking

Sunday, August 22, 2021

பள்ளிக்கு அருகே சமூக விரோத செயல்கள் ஆசிரியர்கள் தகவல் அளிக்கலாம்: எஸ்பி

பள்ளிக்கு அருகே சமூக விரோத செயல்கள் ஆசிரியர்கள் தகவல் அளிக்கலாம்: எஸ்பி
ஆய்வுக்கூட்டத்தில், எஸ்பி பவன்குமார் தெரிவித்ததாவது:
பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் பான்ப ராக், குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட் கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தால் உடனடியாக என்னுடைய செல்போன் எண்ணுக்கு தகவல் அளிக்கலாம். தகவல் அளித்தவரின் விபரம் ரகசியமாக வைக்கப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகள் மீண்டும் திறப்பதால், மாணவர்களை குறி வைத்து இதுபோன்ற சமூக விரோத நடவடிக்கை கள் இருக்கலாம். எனவே, மாணவர்கள் மூலம் தகவல் கிடைத்தாலும், உடனடியாக தெரிவிக்க வேண்டும். அதேபோல், பள்ளிகளுக்கு அருகே சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் மாணவிகளை கேலி கிண்டல் செய்வோர் குறித்தும் தகவல் அளிக்கலாம் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog