பாடத்திட்டத்தை மாற்ற நிபுணர் குழு: அரசு முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 28, 2021

1 Comments

பாடத்திட்டத்தை மாற்ற நிபுணர் குழு: அரசு முடிவு

'உயர்கல்வி நிறுவனங்களின் பாட திட்டத்தையும், தேர்வு முறையையும் மாற்றி அமைக்க, நிபுணர் குழு அமைக்கப்படும்' என, உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

உயர்கல்வியின் நடப்பு கல்வி ஆண்டு திட்டங்கள் குறித்து, அரசின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:இதுவரை, 2,500 தமிழக மாணவர்களுக்கு, 'கேட்' நுழைவு தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த கல்வி ஆண்டில், தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
வரும் ஆண்டிலும், தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்த முயற்சிக்கப்படும்.அரசு, உதவி பெறும் கல்லுாரி மாணவர்களுக்கு, பேராசிரியர்களை பொறுப்பாளர்களாக நியமித்து, வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படும். கல்லுாரி கல்வி இயக்குனரகம், டிஜிட்டல் நிர்வாகத்துக்கு மாற்றப்படும்.சென்னை பல்கலை சார்பில், அதிநவீன நோய் தொற்று ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். அண்ணா பல்கலையில், மின் ஆளுமை சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்படும். கோவை பாரதியார் பல்கலை சார்பில், மூலிகை தோட்டம் அமைக்கப்படும். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை சார்பில், தொல்லியல் ஆய்வு மையம் அமைக்கப்பட்டு, தொல்லியல் துறையுடன் இணைந்து செயல்படும்.சேலம் பெரியார் பல்கலை சார்பில், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் அமைக்கப்படும்.உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்களிடையே சுய தொழில் துவங்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், பாடத்திட்டம், தேர்வு முறையை மாற்றி அமைக்க, நிபுணர் குழு அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மீண்டும் டி.ஆர்.பி., நியமனம்

'உயர்கல்வி துறையின் ஆசிரியர் பணியிடங்கள், டி.என்.பி.எஸ்.சி., வழியே நிரப்பப்படும்' என, அமைச்சர் பொன்முடி ஏற்கனவே கூறியிருந்தார்.ஆனால், கொள்கை விளக்க குறிப்பில், 'அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாகவும், ஆசிரியரல்லா பணியிடங்கள், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியாகவும் நிரப்பப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews