வயதானவர்கள் நேரில் வர அவசியம் இல்லை - ரேஷன் கடையில் உரிய படிவம் சமர்ப்பித்தால்வேறு நபர்கள் மூலம் பொருட்கள் வாங்கலாம் : அமைச்சர் சக்கரபாணி தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 17, 2021

Comments:0

வயதானவர்கள் நேரில் வர அவசியம் இல்லை - ரேஷன் கடையில் உரிய படிவம் சமர்ப்பித்தால்வேறு நபர்கள் மூலம் பொருட்கள் வாங்கலாம் : அமைச்சர் சக்கரபாணி தகவல்

ரேஷன் கடைகளில் 5 வயதுக்கு மேற்பட்ட எவரும் சென்று பொருட்களை வாங்கலாம். வாங்க இயலாத முதியவர்கள், வேறு ஒருவர்மூலம் வாங்குவதற்கான படிவங்களை வழங்க வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

இதுதொடர்பாக பேரவையில் நடந்த விவாதம்:

ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்): தமிழகத்தில் 5 விதமான குடும்ப அட்டைகள் உள்ளன. அதே போல, விரல் ரேகை பதிவின் மூலமே பொருள் வழங்கப்படுகிறது. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இந்த குழப்பங்களை போக்க வேண்டும்.
மேலும், மத்திய அரசு கொண்டுவந்த மீனவர்கள் சட்ட மசோதா நிறைவேற்றப்படவில்லை. அதை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.

ஆர்.காமராஜ் (அதிமுக): தமிழகத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்துடன் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படிதான் முன்னுரிமை, முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள், அந்தியோதயா அட்டைகள், சர்க்கரை குடும்ப அட்டைகள், ஒரு பொருளும் வாங்காத அட்டைகள் என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தவறு ஏதும் நடைபெறவில்லை. அமைச்சர் அர.சக்கரபாணி: மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் கடந்தகால அரசு இணைந்ததால்தான் இந்த 5 வகையான குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரல் ரேகை பதிவு மூலமாகவே பெரும்பாலான மாவட்டங்களில் 99 சதவீதம் பேர் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள 5 வயதுக்கு மேற்பட்ட எவரும் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கலாம். வயதானவர்கள் வந்து வாங்க முடியாவிட்டால், ரேஷன் கடை பணியாளர்களிடம் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து, தனக்கு பதிலாக வேறு ஒருவரை பொருட்களை வாங்கி வருவதற்கு அனுமதிக்கலாம்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews