குறைந்தது கொரோனா பரவல்!: ஆந்திராவில் ஓராண்டுக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு..ஆர்வமுடன் பயிலும் மாணவர்கள்..!
ஹைதராபாத்: ஆந்திராவில் ஓராண்டுக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆந்திராவில் கடந்த ஓராண்டாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த சூழலில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கின்றன. மாணவ, மாணவியர் அனைவரும் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தந்திருந்தனர். இருப்பினும் பெற்றோர்கள் மத்தியில் அச்சம் நிலவிக்கொண்டே உள்ளது. கொரோனா முதலாவது அலை சற்று குறைந்த பிறகு கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் சில வாரங்களிலேயே கொரோனா 2வது அலை தொடங்கி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று பரவியதை தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டது.
தற்போது 2ம் அலையின் தாக்கம் குறைந்துள்ளதை அடுத்து பள்ளிகளை திறக்க ஆந்திர அரசு முடிவு செய்தது. அதன்படி ஆந்திராவில் ஓராண்டுக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் மொத்தம் 67,137 பள்ளிகள் உள்ளன. 39,140 ஆரம்ப பள்ளியும், 9,213 தொடக்கப்பள்ளியும், 12,284 உயர்நிலை பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இதில் 73 லட்சத்து 37 ஆயிரம் படித்து வருகின்றனர். 3 லட்சம் ஆசிரியர்கள் மாணவ, மாணவியருக்கு கல்வியை போதித்து வருகின்றனர். ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக அனைத்து ஆசிரியர்களுக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அரசு கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வகுப்பறைகள் அனைத்தும் தினந்தோறும் கிருமிநாசினி கொண்டு சுத்தும் செய்யவும், ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்பு நடத்தவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.