தொழில் முதலீட்டுக்கழகம் சார்பில், கோவை, குறிச்சி கிளைகளில் சிறப்பு தொழில் கடன் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை நிறுவ, விரிவுபடுத்த சிறப்பு திட்டத்தில் கடனுதவி வழங்குகிறது.இந்த நிறுவனத்தின் கோவை மற்றும் குறிச்சி கிளை அலுவலகங்களில் சிறப்பு தொழில் கடன் விழா ஆக.,18ல் தொடங்கியுள்ளது.
இம்மாதம் 27ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது.இதில், சிறப்பு தொழில் திட்டங்கள், புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மூலதன மானிய திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்படும்.தகுதி வாய்ந்த தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம், ஒன்றரை கோடி ரூபாய் வரை விரைந்து பெறவும் ஏற்பாடு செய்யப்படும்.இந்த வாய்ப்பை தொழில் துறையினர், தொழில் முனைவோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Search This Blog
Friday, August 20, 2021
Comments:0
அரசு மானியத்திட்டத்தில் கடன்: தொழில் முனைவாேருக்கு வாய்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.