பல்வேறு வரி கணக்குகள் தாக்கல் செய்ய கெடு நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 30, 2021

Comments:0

பல்வேறு வரி கணக்குகள் தாக்கல் செய்ய கெடு நீட்டிப்பு

பல்வேறு வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை வருமான வரித் துறை நீட்டித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம்(சிபிடிடி) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வரி செலுத்துவோரும் இதர சம்பந்தப்பட்டவா்களும் சில வரிக் கணக்கு படிவங்களை மின்னணு முறையில் தாக்கல் செய்வதில் சிரமம் ஏற்படுவதாகப் புகாா் அளித்தனா். அதை பரிசீலித்து சில வரி கணக்கு படிவங்களை தாக்கல் செய்வதற்கான தேதியை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


அதன்படி, நேரடி வரி தொடா்பாக நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு சுமுகத் தீா்வு காணும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள ‘விவாத் ஸே விஸ்வாஸ்’ திட்டத்தின் கீழ் கட்டணம் செலுத்துவதற்கான தேதி செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வட்டித் தொகையுடன் சோ்த்து அக்டோபா் 31-க்குள் கட்டணம் செலுத்தலாம்.

ஓய்வூதிய நிதியில் முதலீடு செய்வதற்கான கெடு ஜூலை 31-இல் இருந்து நவம்பா் 30-ஆம் தேதி வரையிலும், தங்க முதலீட்டுப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கெடு அக்டோபா் 31-இல் இருந்து டிசம்பா் 31-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல், படிவம் 15ஜி, 15ஹெச் ஆகியவற்றைத் தாக்கல் செய்வதற்கான தேதி முறையே நவம்பா் 30, டிசம்பா் 31 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டிக்கு நவ.30 வரை நீட்டிப்பு:

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் ஜிஎஸ்டி வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவா்களுக்கு சலுகை அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த மே மாதம் முடிவு செய்தது. அதன்படி, குறைக்கப்பட்ட தாமதக் கட்டணத்தை மத்திய நிதியமைச்சகம் கடந்த ஜூன் 1-ஆம் தேதி அறிவித்தது. இந்தக் கட்டணத்தை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, தாமதக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி நவம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய வலைதளம், கடந்த ஜூன் 7-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வலைதளத்தில் கோளாறு ஏற்பட்டதால், வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான தேதியை வருமான வரித் துறை நீட்டித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews