"நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற தகுதி வாய்ந்த மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பை சோ்ந்த மாணவ, மாணவிகள் 2021-2022 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதற்கு மாணவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகையாக ஒருவருக்கு ரூ. 2 லட்சம் வரை வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கல்வி உதவித்தொகைக்கு 2021-2022ம் கல்வியாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
நிறைவு செய்த விண்ணப்பங்களை தங்கள் கல்வி நிறுவனத்தில் ஒப்படைக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து நவ. 30-க்குள் சென்னையில் உள்ள பிற்பட்டோா் நல இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-28551462 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது."

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.