நரிக்குறவர் இன மக்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 15, 2021

Comments:0

நரிக்குறவர் இன மக்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருவாரூர் மாவட்டத்தில் நரிக்குறவர் இன மக்கள், நரிக்குறவர் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவித்தொகைகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நலத்திட்ட உதவிகள்:

தமிழகத்தில் பிற்படுத்தபட்ட பிரிவை சேர்ந்த நரிக்குறவர் மக்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெறும் நோக்கில் குறிப்பிட்ட சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு விபத்து நிவாரணம், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இது தவிர தொழில் தொடங்குவதற்கு மானிய உதவியும் வழங்கப்படுகிறது. அதன்படி 12ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ரூ.1,500 கல்லூரி பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.1,500 மேலும் பட்டமேற்படிப்புகளுக்கு ரூ.4,000 விபத்தால் ஏற்பட்ட மரணங்களுக்கு ரூ.1,0000, இயற்கை மரணங்களுக்கு ரூ.20,000, தொழிற்கல்வி பட்ட மேற்படிப்புக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. 6 முதல் 9ம் வகுப்பு முதல் மாதம் 100 ரூபாய் 10 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் திருமண உதவித்தொகை ரூ.2,000 மகப்பேறு உதவித்தொகை ரூ.6,000 முதியோர் உதவித்தொகை மாதந்தோறும் ரூ.1,000 மேலும் தனிநபர் சுய தொழில் தொடங்க ரூ.7,500 வரை மானியம் மற்றும் குழுவாக தொழில் தொடங்க அதிகபட்சமாக ரூ.1,25,000 வரை மானியம் அளிக்கப்படுகிறது.

மேற்கண்ட நலத்திட்ட உதவிகளை பெற்று நரிக்குறவர் இன மக்கள் பயன்பெற வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்கள் அரசால் வழங்கப்படும் திட்டங்களில் சேர விண்ணப்பிக்கலாம். இதற்கான கூடுதல் விவரங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு திட்டங்கள் பெறுவது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews