தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆகஸ்ட் 4 கடைசி தேதி – ஆட்சியர் அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 02, 2021

Comments:0

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆகஸ்ட் 4 கடைசி தேதி – ஆட்சியர் அறிவிப்பு!

2021 – 22ம் கல்வியாண்டில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்புபவர்கள் ஆகஸ்ட் 4ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கும் படி ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொழிற்பயிற்சி நிலையம்:

தற்போது பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்து வரும் நிலையில் மாணவர்கள் பல்வேறு பிரிவுகளை தேர்ந்தேத்து படிக்க முன்வந்து கொண்டுள்ளனர். இதனை தொடந்து 2021 – 22ம் கல்வியாண்டில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், கோட்டூரில் உள்ள அரசு மற்றும் சுயநிதி தோணியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கான அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களிலும் சேருவதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவர்களுடன் தொழிற்பிரிவுகளும் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள் இணையத்தில் உள்ள விண்ணப்பம் இணைய விரும்பும் மாணவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இ-சேவை மையங்களிலிருந்து விண்ணப்பிக்கலாம். மேலும் கலந்தாய்வு செய்ய விரும்பும் மாவட்டத்தையும் குறிப்பிடலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு இலவசமாக விலையில்லா சீருடை, தையற்கூலி, மடிக்கணினி, மிதிவண்டி, பாடப்புத்தகம், காலணி மற்றும் பஸ் பாஸ் வழங்கப்படும். இதற்கு மாவட்ட வாரியாக விண்ணப்பிக்க அவசியம் இல்லை என நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் ஆர்வம் உள்ள மாணவர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை ஆகஸ்ட் 4ம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தொழிற்பயிற்சி நிலையங்கள் அணுகவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews