கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை - மாணவ மணிகளுக்கு கல்விக்கான உதவித்தொகை! - விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.08.21 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 02, 2021

Comments:0

கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை - மாணவ மணிகளுக்கு கல்விக்கான உதவித்தொகை! - விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.08.21

IMG_20210802_171132
Screenshot_2021-08-02-17-03-36-329_com.android.chrome%257E2
கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை! மாணவ மணிகளுக்கு கல்விக்கான உதவித்தொகை!

இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மொத்தத்தில்ரூ, 13 லட்சம் பெறுமானமுள்ள உதவித்தொகைகள் அவரவர் தகுதிக்கு ஏற்பபகிர்ந்தளிக்கப்படும். முக்கிய நிபந்தனைகள் :

மாணவர், அரசு அங்கீகாரம் பெற்றுள்ள கல்வி நிலையத்தில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்க வேண்டும். கடைசியாக எழுதிய பரீட்சையில் குறைந்த பட்சம் 80 சதவீதம் (சராசரி) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

ரூ.80,000க்கும் குறைவான வருட வருமானம் உடைய குடும்பத் தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கி ப்ரிண்ட் செய்யவும்.

விண்ணப்பப் படிவத்தை மாணவர் தமது கைப்பட எழுதி முழுமையாகப் பூர்த்தி செய்யவும்.

விண்ணப்பத்தில் கோரப்படாத சான்றிதழ்களை அனுப்புதல் கூடாது. தபால் மூலமே விண்ணப்பத்தை அனுப்பவும். கூரியர் தவிர்க்கவும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கப்படும். மற்றபடி கடிதப் போக்குவரத்து கிடையாது. சான்றிதழ் நகல்களைத் திருப்பி அனுப்ப இயலாது.

உதவித் தொகைகள் பெற மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதில் அறங்காவலர்கள் முடிவே இறுதியானது.
ஸ்பாஸ்டிக், ஆடிஸ்டிக் போன்று சிறப்புக் கல்வி தேவைப்படும் மாணவர்களுக்கு ஒரு பகுதி உதவித்தொகை ஒதுக்கீடு செய்யப்படும். இவர்கள் சார்பில் பெற்றோர்/பாதுகாவலர் விண்ணப்பிக்கலாம்.

ஆகஸ்ட் 31, 2021 தேதிக்கு முன்னதாக விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை *தேம்' முதல் மாடி, தெ. 14, நாலாவது பிரதான சாலை, கஸ்தூர்பா நகர், அடையாறு. சென்னை-600 020 Download Application Form Pdf

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84611532