தமிழகத்தில் தற்போது ஆங்காங்கே அஞ்சல் துறையின் முகவர் பணிக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கான நேர்காணல் வரும் 12ம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.
நேர்காணல் அறிவிப்பு:
தமிழகத்தில் அஞ்சல் துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தேர்வுகள் மூலமும் காலிப்பணியிடங்களை சம்மந்தப்பட்ட துறைகள் நிரப்பி வருகிறது. தற்போது அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் முகவராகப் பணியாற்ற விரும்புபவர்களுக்கான நேர்காணல் தேர்வு நடைபெற உள்ளது. இதில் பங்கு பெற விரும்புபவர்களின் வயது 18 முதல் 65 வரை இருப்பது கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், சுய தொழில் செய்பவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் போன்றோர் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுடைய விண்ணப்பதாரர்கள் ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கூறியதாவது, வயது வரம்பு மற்றும் பிற தகுதிகளை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆகஸ்ட் 12ம் தேதி மதியம் 2 மணிக்கு நடக்கும் நேர்காணலின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர் எனவும் கூறியுள்ளார். மேலும் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தகவல் தெரிந்து கொள்ள 0424-2258966 என்ற எண்ணை டயல் செய்யலாம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.