தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை விளக்கும் கருத்தரங்கு: இணையவழியில் 10-ம் தேதி வரை நடக்கிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 02, 2021

Comments:0

தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை விளக்கும் கருத்தரங்கு: இணையவழியில் 10-ம் தேதி வரை நடக்கிறது

புதிய தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களை விளக்கும் கருத்தரங்கு, வரும் 10-ம் தேதி வரை இணையவழியில் நடக்கிறது. இந்தியாவில் 1986-ம் ஆண்டுவடிவமைக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாகபுதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம்அறிமுகப்படுத்தியது. ஒருபுறம்இதற்கு வரவேற்பு கிடைத்தபோதிலும், மறுபுறம் பலத்த எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்தன. இன்றளவும் தேசியக் கல்விக் கொள்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தி ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து மத்திய கல்வி அமைச்சகம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தி ஓராண்டு நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக ஆகஸ்ட் 2-ம் தேதி (இன்று) முதல் வரும் 10-ம் தேதி வரை இணையவழி கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், தேசிய கல்விக் கொள்கையின் முக்கியமான அம்சங்கள் குறித்து வல்லுநர்கள் விளக்கவுள்ளனர். இக்கருத்தரங்கத்தை மத்திய கல்வி அமைச்சகத்தின் யூடியூப் தளத்தில் (https://www.youtube.com/user/HRDMinistry) நேரலையில் காணலாம். இந்த இணையவழி கருத்தரங்கைப் பார்க்குமாறுமாணவர்களை கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews