அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான NHIS சந்தாவை உயர்த்தி புதிய திட்டம் அறிமுகம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 01, 2021

Comments:0

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான NHIS சந்தாவை உயர்த்தி புதிய திட்டம் அறிமுகம்.

NHIS - 2021 - அரசுத் துறைகள், மாநில பொதுத் துறை நிறுவனங்கள், சட்ட ரீதியான வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றின் ஊழியர்களுக்கும், அவர்களின் தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் அமலாக்கம் - அரசாணை வெளியீடு! அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு NHIS - SCHEME - 2021 புதிய திட்டம் அறிமுகம்!
இத்திட்டம் 01-07-2021 முதல் 30-06-2025 வரை அமலுக்கு வருகிறது.
அதிகபட்சமாக நிபந்தனைகளுக்கு உட்பட்டு ரூ 10 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை பெறலாம்!
இத்திட்டம் அமலுக்கு வரும் ஜூலை-2021 முதல் ரூ295 காப்பீட்டுத் தொகையாக செலுத்த வேண்டும்!
REIMBURSEMENT பெறும் நிகழ்வில் CLAIM DOCUMENTS- ஐ பயனாளர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் GRIEVANCE REDRESSAL OFFICER க்கு அனுப்பி வைக்க வேண்டும்!
இத்திட்டத்தின் கீழ் 203 வகையான அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை பெறலாம்!
இத்திட்டத்தின் கீழ் 1️⃣1️⃣6️⃣9️⃣ மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க இணைந்து உள்ளது!
அரசு ஊழியர் புதிய நல்வாழ்வு காப்பீட்டு திட்டம் 1.காலம்
1.7.21 முதல் 30.6.25 வரை
4 ஆண்டுகள்
2.சந்தா
Rs. 180 என்பது Rs .300 ( 295 +5) ஆக உயர்த்தப்பட்டுள்ளது
3.காப்பீட்டு தொகை
Rs 4 லட்சம் என்பது Rs .5 லட்சமாக உயர்ந்தப்பட்டுள்ளது
கேன்சர் உறுப்பு மாற்று சிகிச்சை Rs .7.50 லட்சம் என்பது Rs .10 லட்சமாகவும்
கண்புறை அறுவை சிகிச்சைக்கு Rs 25,000 என்பது Rs 30,000 ஆகவும்
கர்ப்பபை அகற்றும் சிகிச்சைக்கு Rs .45 000 என்பது Rs .50,000 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது
4.அவசரம் மற்றும் அவசரமில்லாத சிகிச்சைக்கு அங்கீகாரம் இல்லாத மருத்துவமனைகளில் பெறலாம்.
75 % தொகை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்
G. O. NO:160 FINANCE (Salaries) DEPARTMENT Dated: 29-06-2021 - Download here...

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews