மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) உயர்வு – திருத்தப்பட்ட HRA விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 20, 2021

Comments:0

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) உயர்வு – திருத்தப்பட்ட HRA விளக்கம்

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு திரும்ப கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்ட பிறகு, ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ் (HRA) க்கான புதிய அறிவிப்புகள் தற்பொழுது வெளியாகியுள்ளது. அந்த வகையில் HRA தொகை 27 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. HRA உயர்வு
அரசுத்துறை அலுவகங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பெருமளவு சம்பளத்துடன் சிறப்பு சலுகையாக அகவிலைப்படி, மருத்துவ கொடுப்பனவு, பயணப்படி உள்ளிட்டவைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனுடன் அந்த ஊழியர்களுக்கென HRA அதாவது ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ்ன் வழங்கப்படுகிறது. அதன் படி அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் 2 முறை என்ற அளவில் உயர்த்தி கொடுக்கப்படும் இந்த அகவிலைப்படி தொகையானது கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த DA தொகையை திரும்ப கொடுப்பதாக மத்திய அரசு சமீபத்தி அறிவித்தது. இதனிடையே திருத்தப்பட்ட HRA தொகையை ஆகஸ்ட் மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த HRA ஒரு அரசு ஊழியரின் சம்பளத்தின் ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. இது குறித்து வெளியான அறிக்கையின்படி, அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 25 சதவீதத்திற்கு மேல் DA திருத்தப்பட்டதால் HRA அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நகரத்திற்கும் இடையே வேறுபடும் இந்த HRA தொகை, X, Y மற்றும் Z என்ற மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து X பிரிவில் உள்ள ஊழியரின் அடிப்படை ஊதியத்தில் 27 சதவீதமாகவும், Y வகையில் 18 சதவீதமாகவும், Z வகையில் 9 சதவீதமாகவும் திருத்தப்பட உள்ளது. கடந்த வாரம், மத்திய அரசு ஊழியர்களுக்கான DA மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DR ஆகியவற்றை 17% மற்றும் 28 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews