பல்கலை வளாகங்களில் மாசற்ற சூழல் திட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 21, 2021

Comments:0

பல்கலை வளாகங்களில் மாசற்ற சூழல் திட்டம்

இந்தியாவின் முன்னணி
பல்கலைகள் ஒன்றிணைந்து, அவற்றின் வளாகங்களில் 100 சதவீதம் பசுமையான சூழலை உருவாக்க உறுதி எடுத்துள்ளன.

பாரிஸ் பருவ நிலை மாற்ற ஒப்பந்தத்தின் ஐந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தியா வின் 12 பல்கலை மற்றும் கல்வி மையங்களின் துணை வேந்தர்கள் ஒரு செயல் திட்டத்தினை உருவாக்கி உள்ளனர்.

இதன்படி, பல்கலை வளாகங்களில் 100 சத வீதம் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத பசுமையான சூழலை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.
"இத்திட்டத்தின் கீழ். முதன்
முதலாக டில்லி ஐ.ஐ.டி., வளாகத்தில் 50 சதவீதத்திற் கும் அதிகமான கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது," என டில்லி ஐ.ஐ.டி., இயக்குனர் ராம்கோபால் ராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி

சென்னை கூறியதாவது: ஐ.ஐ.டி., வளாகத்தில் அதிக பட்சமாக சூரிய ஒளி கூரைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. வளாகத்தில் 45 ஆயிரம் மரங்கள் உள்ளன. அவை எந்த அளவிற்கு கரியமில் வாயுவை ஈர்த்து, பசுமை சூழலுக்கு துணை புரி கின்றன என்பது குறித்து கணக்கெடுக்கவில்லை. மாணவர்கள் பெட்ரோலிய வாகனங்களை பயன்படுத்துவதில்லை. வளாகத்தில் மின்சார பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் கரியமில வாயு வெகுவாக குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். சென்னை, ஐ.ஐ.டி., திட்டப் பிரிவு தலைவர் லிகி பிலிப் கூறும்போது, "வளாகத்தில் திட மற் றும் திரவக் கழிவுகளன சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் பல்வேறு பணிகளுக்கு பயன்படுத் தப்படுத்துகிறோம்,' என்றார்.

உலகளவில் 250க்கும் மேற்பட்ட பல்கலைகள் 100 சதவீதம் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத வளாகங்களை உருவாக்க ஒன்றிணைந்துள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews