ப்ளூ டிக் இல்லாமல் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை பார்க்கும் வசதி – புதிய அப்டேட்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 10, 2021

Comments:0

ப்ளூ டிக் இல்லாமல் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை பார்க்கும் வசதி – புதிய அப்டேட்!

வாட்ஸ்ஆப் நிறுவனம் ஆப்பிள் iOS பயனர்களுக்காக புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், ப்ளூ டிக் இல்லாமல் வாட்ஸ்ஆப் செய்திகளை படிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய அப்டேட்:

வாட்ஸ்ஆப் என்பது நமது அன்றாட வாழ்வில் செய்திகளை பரிமாறிக்கொள்ள உதவும் முக்கிய செயலியாக உள்ளது. வாட்ஸ்ஆப் நிறுவனம் ஆண்ட்ராயிட் மற்றும் iOS ஆகிய இரண்டு வகை பயனர்களும் பயன்படுத்தும் வகையில் பல புதிய அப்டேட்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்ஆப்-ல் ப்ளூ டிக் இல்லாமல் மெசேஜ்களை பயனர்கள் படிக்கும் வகையில் ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப்பின் புதிய பீட்டா புதுப்பிப்பை பயன்படுத்தும் iOS பயனர்கள் தங்களது சாட்பாக்ஸ் க்கு செல்லாமல் செய்திகளை படிக்க முடியும். இதன் மூலம் மிகவும் விரைவாகவும் செய்திகளை படிக்க முடியும். இதற்காக 2.21.140.9 என்ற அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக WABetaInfo அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் Notification பகுதியில் இருந்தே செய்திகளை பயனர்கள் படிக்க இயலும். மேலும், முந்தைய செய்திகளை படிக்க Notification ஐ விரிவாக்கவும் முடியும். புகைப்படங்கள், Gif, வீடியோக்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் போன்றவற்றையும் காணலாம். பயனர்கள் பதிலளிக்க முயலும் போது சாம்பல் நிற டிக் ப்ளூ டிக் ஆக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. iOS பயனர்கள் அப்டேட் செய்து இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ளும் படி வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews