மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2022ம் ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்த இருக்கும் இறுதி தேர்வுகள் முறையை மாற்றியமைத்துள்ள நிலையில், தேர்வு முறைகளை பற்றிய விளக்கங்களை வெளியிட்டுள்ளது.
இறுதி தேர்வு முறை:
2020ல் தேசிய கல்வி கொள்கை சிபிஎஸ்இ உள்ளிட்ட வாரியங்களின் தேர்வு முறையில் சீர்திருத்தம் செய்ய உள்ளதாக அறிவித்தது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் 2021ல் தேர்வுகள் மாணவர்களின் பகுப்பாய்வு திறன், பாடங்களை புரிந்து கொள்ளும் திறன் மற்றும் அன்றாட வாழ்வின் சூழ்நிலைகளைப் பற்றிய அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுவார்கள் என்றும் கூறினார். இந்நிலையில், 2020 மற்றும் 2021ம் கல்வி ஆண்டுகளில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வந்தது. இதனால் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு உள்மதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிபிஎஸ்இ வாரியம் 2021-2022ம் கல்வி ஆண்டின் இறுதி தேர்வு முறையை மாற்றியமைத்துள்ளதாக முன்னரே அறிவித்துள்ளது. அதன்படி, பொதுத் தேர்வுகள் மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக அறிவித்து தேர்வு முறைகளை பற்றியும் வெளியிட்டு உள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ள இரண்டு இறுதி பருவ தேர்வுகளும் வெவ்வேறு முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் பருவ இறுதித்தேர்வு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திலும், இரண்டாம் பருவத் தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திலும் நடத்தப்படும். முதல் பருவ இறுதி தேர்வுகள் பல தேர்வு வினாக்கள் (MCQ) அடிப்படையில் 90 நிமிடங்களுக்கு நடத்தப்படும். இரண்டாம் பருவ இறுதி தேர்வு, குறுகிய மற்றும் நீண்ட வினாக்களுடன் இரண்டு மணி நேரம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே, சிபிஎஸ்இ நியமித்த வெளிமைய கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் நடத்தப்படும். விரைவில் பாடத்திட்டம் குறித்த அறிவிப்புகளையும் கல்வி வாரியம் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அகமதிப்பீடுகள் 2021ம் கல்வி ஆண்டில் அவர்கள் பெற்ற இறுதி மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.