தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக நாளை பள்ளிக்கல்வித்துறை செயலர் காகர்லா உஷா முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் இருந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வரும் சூழலில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே படித்து வருகிறார்கள்.
சமீபத்தில் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக நாளை மறுநாள் பள்ளிக்கல்வித்துறை செயலர் காகர்லா உஷா முக்கிய ஆலோசனை நடத்துகிறார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் கருத்தை கேட்டறிய உள்ளார் பள்ளிக்கல்வித்துறை செயலர். பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளதா என ஆலோசனை நடைபெற உள்ளது.
Search This Blog
Thursday, July 15, 2021
Comments:0
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக நாளை பள்ளிக்கல்வித்துறை செயலர் முக்கிய ஆலோசனை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.