மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தொலைநிலைக் கல்வியில் நடந்த ஆன்லைன் தேர்வில் 100-க்கும் மேற்பட்டோருக்கு குறைந்த மதிப்பெண்கள் வழங்கப் பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கரோனா ஊரடங்கால் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தொலைநிலைக் கல்வியில் இளநிலை, முதுநிலை வகுப்பு களில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகள் ஆன்லைனில் தேர்வுகளை எழுதினர். விடைத்தாள்களை ஆன்லைன் மூலமும், தபால் மூலமும் தொலைதூர தேர்வாணையத் துக்கு அனுப்பினர். இதில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டு சமீபத்தில் தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
இதில் ஓரிரு பாடங்களில் 5, 10 என குறைந்த மதிப்பெண்களே வழங்கப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இதில் ஆன்லைனில் அனுப்பிய விடைத்தாள்கள் சேகரிப்பு கணினி மையத்துக்கு முழுமையாக சென்றடையாததும், ஓரிரு பக்கங்கள் மட்டுமே வந்ததால் அதை கணக்கில் எடுத்து மதிப்பெண் வழங்கியதும் கண்டறியப்பட்டன. தபால் மூலம் அனுப்பிய விடைத்தாள்களை திருத்தி மதிப்பெண் அளிக்கும்படி பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக தொலைநிலைக் கல்வி நிர்வாகம் தெரிவித்தது.
பல்கலை.தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவர்கள் ஆன் லைன், ஆப்லைனில் (தபால்) விடைத்தாள்களை அனுப்பினாலும், ஆன்லைன் விடைத்தாள்களுக்கு முன்னுரிமை கொடுத்து திருத்தி மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. ஆன்லைன் விடைத்தாள்கள் முழுமையாக கிடைக்க பெறாததால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து துணைவேந்தர், தேர்வாணைய அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
Search This Blog
Thursday, July 15, 2021
Comments:0
Home
Universities
ஆன்லைனில் விடைத்தாள் திருத்தியதில் குளறுபடி: 100-க்கும் மேற்பட்டோருக்கு குறைந்த மதிப்பெண்
ஆன்லைனில் விடைத்தாள் திருத்தியதில் குளறுபடி: 100-க்கும் மேற்பட்டோருக்கு குறைந்த மதிப்பெண்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.