Breaking

Saturday, July 24, 2021

சுந்தரனார் பல்கலை.யில் மாணவர் சேர்க்கை!

சுந்தரனார் பல்கலை.யில் மாணவர் சேர்க்கை
திருநெல்வேலி, ஜூலை 23: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத் தில் 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.
இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு)ஆர்.மருதகுட்டிவெளியிட்டுள்ள செய் திக்குறிப்பு:
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துறைகளில் பயிற்றுவிக்கப்படும் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் 2021-22-ஆம் கல்வியாண்டுக் கான மாணவர் சேர்க்கை இணையவழியாக நடை பெற்று வருகிறது. விண்ணப்பங்களை அனுப்ப வரும் 31-ஆம் தேதி கடைசி நாளாகும். முதுகலை பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வரும் ஆகஸ்ட் 12, 13 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் நடைபெறுகிறது. அதற் கான வழிகாட்டு நெறிமுறைகள் இணையதளம் மூலமாக பின்னர் அறிவிக்கப்படும். மற்ற படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கையானது மாணவர் கள் சமர்ப்பித்துள்ள மதிப்பெண் பட்டியல் அடிப் படையில் நடைபெறும். மாணவர் சேர்க்கை தொடர்பான மேலும் விவரங்களை பல்கலைக்க ழக தொலைபேசி (0462-2333741) மூலமாகவோ அல்லது www.msuniv.ac.in என்ற இணையத ளத்தின் மூலமாகவோ அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog