தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் மாணவியர்கள், பார்வையற்ற மாணவ மாணவிகளின் வாசிப்பாளர்கள் இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கல்வி உதவித்தொகை
கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித்தொகையை தமிழக அரசு அளித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் கல்வி உதவித்தொகையை பெற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களது விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இந்த ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
அதன்படி மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், பார்வையற்ற மாணவ, மாணவிகளின் வாசிப்பாளர்கள் அனைவருக்கும் 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான உதவித்தொகை கொடுக்கப்பட இருக்கிறது. இந்த உதவித்தொகையை பெற்றுக்கொள்வதற்கு தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் உள்ளிட்ட பல விதமான பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் 40% மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் அனைவரும், வேறு ஏதேனும் துறைகள் மூலமாக கல்வி உதவித்தொகை பெறவில்லை என்று அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வரால் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளின் கீழ் உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண் 17, தரைத்தளம் என்ற முகவரிக்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.