தமிழகத்தில் உள்ள அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்பவர்களது எண்ணிக்கை கடந்த பிப்ரவரி மாதம் வரை 63.63 லட்சமாக உள்ளதாக அரசு தகவல் அளித்துள்ளது.
வேலைவாய்ப்பு பதிவு:
தமிழகத்தில் அரசுப்பணிகளை பெற வேண்டுமெனில்அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அதாவது தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பவர்களுக்கு, அவர்களது பணி நியமனத்தின் போது முன்னுரிமை வழங்கப்படுவது உண்டு. அரசு பணிக்கான போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு, பணி நியமனம் செய்யப்பட்டு வந்தாலும், இத்தகைய வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பவர்களுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்கிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இதுவரை 63.63 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதாவது தமிழக அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 87,497 பேரும், 19 முதல் 23 வயதுடைய கல்லூரி மாணவர்கள் 12,98,891 பேரும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து 24 முதல் 35 வயதுடைய 22,78,107 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர். தவிர 36 முதல் 57 வயது வரையுள்ள 10,89,786 பேரும், 58 வயதுக்கு மேற்பட்டவர்கள் 8,841 பேரும் பதிவு செய்துள்ளனர். அந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழகத்தில் மொத்தம் 63,63,122 பேர் தங்களது பெயர் மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.