3 தவணை அகவிலைப்படி உயர்வு நிலுவை - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 21, 2021

1 Comments

3 தவணை அகவிலைப்படி உயர்வு நிலுவை - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 தவணை அகவிலைப்படி உயர்வு நிலுவையை வழங்க வேண்டும்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி, மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு 1-1-2020,1-7-2020,31-1-2020 ஆகிய 3 தவணைக் குரிய அகவிலைப்படி உயர்வு நோய் பரவல் காரணமாக நிறுத்தி வைத்ததோடு நிறுத்திவைக்கப்பட்டுள்ள அகவிலைப் படி விலைவாசி உயர்வு புள்ளிகள் அடிப்படையில் 1.7.2021 முதல் வழங்கப்படும் என்று அறிவித்து மத்திய அரசின் அறி விப்பை தொடர்ந்து முந்தைய அ.தி.மு.க. அரசு 3 தவணை அகவிலைப்படியை நிறுத்தியதுடன் 1.7.2001 முதல் உயர்த்தப் பட்ட அகவிலைப்படி வழங்கப்படும் என்றும் அறிவித்தது. மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தபடி 17 சதவீதம் அக விலைப்படியை தற்போது 28 சதவீதமாக உயர்த்தி அறிவித் துள்ளது. அதேபோல் மத்திய அரசின் அறிவிப்பை பின்பற்றி ராஜஸ்தான் மாநில அரசும், அம்மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக் கது ஆகும். எனவே மத்திய அரசின் அறிவிப்பை பின்பற்றி தமிழக அரசுநிறுத்திவைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வினை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப 17 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தி வழங்கிடுமாறு முதல்-அமைச்சர் உத்தர விட அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வேண்டுகிறோம். மேலும் இந்திய அளவில் முன்மாதிரியாக மூன்று தவணைகளுக்குரிய அகவி லைப்படி உயர்வு நிலுவைத் தொகையை தமிழக அரசு வழங் கிடுமாறு வேண்டுகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. 25% அல்ல 28%மாக தர வேண்டும்.தவறாக பதிவிடப்பட்டுள்ளது.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews