இஸ்ரோவின் இலவச சான்றிதழ் படிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 20 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 07, 2021

Comments:0

இஸ்ரோவின் இலவச சான்றிதழ் படிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 20

ரிமோட் சென்சிங் மற்றும் ஜியோகிரபிக் இன்பர்மேஷன் சிஸ்டம் அறிவியலில் தரமான கல்வி மற்றும் பயிற்சி வழங்கும் நோக்கில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங் 1966ம் ஆண்டுமுதல் செயல்பட்டு வருகிறது.

படிப்பின் முக்கியத்துவம்ரிமோட் சென்சிங் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் ’சுற்றுச்சூழல் படிப்புகளில் ரிமோட் சென்சிங் மற்றும் ஜியோகிரபிக் இன்பர்மேஷன் சிஸ்டம் பயன்பாடு’ எனும் தலைப்பில் கோடைகால குறுகிய சான்றிதழ் படிப்பை ஆன்லைன் வாயிலாக வழங்கப்படுகிறது. படிப்பு விபரங்கள்ஜூலை 26 முதல் 30ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு தினமும் காலை 10 மணி மற்றும் நண்பகல் 12 மணி என இரண்டு அமர்வுகள் இருக்கும். ஒவ்வொரு அமர்விலும் 45 நிமிடங்களுக்கு துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பர். www.youtube.com/user/edusat2004 எனும் ஐ.ஐ.ஆர்.எஸ்.,ன் யூடியூப் சேனல் வாயிலாக பாடங்கள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மாணவர்கள் தங்களது சந்தேகங்களை யூடியூப் சேட் பாக்ஸ் வாயிலாக பதிவிடலாம்.

சான்றிதழ்
பாடங்களின் இடையே கேட்கப்படும் கேள்விகளில் குறைந்தது 55 சதவீத கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவே சான்றிதழ் வழங்கப்படும்.
தகுதிகள்

இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பள்ளியில் 10ம், 11ம் மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இச்சானிறழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://eclass-intl-reg.iirs.gov.in/schoolregistration எனும் இணையதளம் வாயிலாக கேட்கப்பட்டுள்ள விபரங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 20
விபரங்களுக்கு:

டாக்டர் மித்ரா, குழு தலைவர், எம்.ஏ.எஸ்.டி., ஐ.ஐ.ஆர்.எஸ்., டேராடூன்

இமெயில்: mitra@iirs.gov.in

தொலைபேசி: 0135-2524181

பூஜா ஜிண்டால், விஞ்ஞானி, எம்.ஏ.எஸ்.டி., ஐ.ஐ.ஆர்.எஸ்., டேராடூன்இமெயில்:
pooja_j@iirs.gov.in
தொலைபேசி: 0135-2524184

இணையதள முகவரி: www.iirs.gov.in

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews