பிளஸ் 2 மாணவர்களுக்கான 'ஆல் பாஸ்' மதிப்பெண் வெளியானதில் மதுரையில் 9,563 மாணவர்கள் 500 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்றனர்.
மாவட்டத்தில் 36,409 பேர் பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தனர். 'ஆல் பாஸ்' அறிவிப்பால் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். மாவட்ட அளவில் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் முதல் மூன்று இடங்களை (596.25, 594.50 மற்றும் 593.27) பெற்றனர். மெட்ரிக் பள்ளிகளில் 4,858 மாணவர்கள் 500க்கு மேல் பெற்றனர்.இதுபோல் அரசு பள்ளிகளில் முதலிடம் 574.71 (மாநகராட்சி), இரண்டாவது இடம் 574.08 (மாநகராட்சி) மூன்றாவது இடம் 572.86 மதிப்பெண்களை மாணவ, மாணவிகள் பெற்றனர். அரசு பள்ளிகளை சேர்ந்த 618 மாணவர்கள் 500க்கு மேல் மதிப்பெண் பெற்றனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக 19,958 மாணவர்கள் 400 -- 500 மதிப்பெண் பெற்றனர். குறைந்தபட்சமாக 901 மாணவர்கள் 200 - 300 மதிப்பெண்கள் பெற்றனர். வேளாண் அறிவியல், ஆடிட்டிங், பேசிக் ஆட்டோமொபைல் உட்பட 10 பாடப் பிரிவுகளில் 989 மாணவர் 'சென்டம்' பெற்றனர். தமிழ், ஆங்கிலம், கணிதம் உட்பட முக்கிய பாடப் பிரிவுகளில் யாரும் 'சென்டம்' பெறவில்லை.
முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறுகையில் "மதிப்பெண் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு செப்., அல்லது அக்.,ல் தேர்வு நடக்கும். பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை நாளை மறுநாள் (ஜூலை 21) முதல் பதிவிறக்கம் செய்யலாம்" என்றார். தசம ஸ்தானத்தில் மதிப்பெண்கள்
முதல் முறையாக தசம ஸ்தானத்தில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. கொரோனாவால் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் (அதிக மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களில்) 50 சதவீதம், பிளஸ் 1 தியரியில் 20 சதவீதம், பிளஸ் 2 செய்முறை தேர்வில் 30 சதவீதம் அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டதில், பலருக்கு தசம எண்களில் உதாரணமாக 600க்கு 523.28 என மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளன.மதிப்பெண் அள்ளித்தந்த 'பத்தாம் வகுப்பு'பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண்கள் பெற பத்தாம் வகுப்பு மதிப்பெண் கை கொடுத்தன.
அதாவது, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஏதேனும் மூன்று பாடங்களின் மதிப்பெண், பிளஸ் 2 மதிப்பெண்ணிற்கு 50 சதவீதத்திற்கு கணக்கிடப்பட்டது.இதன் மூலம் கடினம் என மாணவர்கள் கருதும் கணிதம், ஆங்கிலம் பாடங்களில் குறைவாக மதிப்பெண் பெற்று, அறிவியல், சமூக அறிவியல், தமிழ் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்றிருக்கும் பட்சத்தில், அவை மூன்றும் கணக்கிடப்பட்டு, பிளஸ் 2வில் அதிக சதவீதம் பெற வழிவகுத்துள்ளது. இதனால் பிளஸ் 2வில், ஆங்கிலம், கணிதம் பாடத்தில் சாதாரண மதிப்பெண் பெற வாய்ப்புள்ள மாணவரும் 50 சதவீதம் (பத்தாம் வகுப்பு) கணக்கீட்டு முறையில், பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பாக அமைந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.