பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கவனத்திற்கு - 5 ஆண்டு எம்.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பு அறிமுகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 21, 2021

Comments:0

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கவனத்திற்கு - 5 ஆண்டு எம்.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பு அறிமுகம்

ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியில் ஒவ்வொரு ஆண்டும் புதுசு... புதுசா...
ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரியில், 2021-22ம் ஆண்டுக்கான, 5 ஆண்டு எம்.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கல்லுாரி முதல்வர் அலமேலு கூறியதாவது:

வட்டமலைபாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி, 1994ல் எஸ்.என்.ஆர்., அறக்கட்டளையால், 180 மாணவர்கள், நான்கு துறைகளுடன் துவக்கப்பட்டது.

நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தற்போது, 4,500 மாணவர்கள், 300 பேராசிரியர்களுடன் தரம் வாய்ந்த தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இன்ஜினியர்களை உருவாக்கி வருகிறது.பன்னாட்டு இன்ஜினியரிங் நிறுனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரித்து வருகிறோம். இந்த வகையில், ஜிஇ ெஹல்த்கேர், 'எல் அண்டு டி' டெக்னாலஜி சர்வீசஸ் உட்பட பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி, மிக சிறந்த பாட திட்டங்களை வகுத்து, பயிற்சி அளித்து வருகிறோம்.கல்லுாரி வளாகத்தில், இன்னொவேசன் சென்டர் மற்றும் சிறு, குறு தொழிலக அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிசினஸ் இன்குபேஷன் இன்ஜினியரிங் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தனி திறன் மேம்பாட்டு மையங்கள் இயங்கி வருகின்றன.ஒவ்வொரு கல்வியாண்டிலும் புதிய பட்ட படிப்புகள் துவக்கப்பட்டு வருகிறது. 2021-22ம் ஆண்டுக்கான, 5 ஆண்டு எம்.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இதில் சேர தகுதி பெற்றவர்கள். இந்த படிப்பின் தனித்தன்மை என்னவென்றால், ஒரு ஆண்டு பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள வாய்ப்பு கிடைப்பதால், மாணவர்களின் செயல்முறை அறிவு மேம்படும்.இம்மாணவர்கள், சைபர் செக்யூரிட்டி, டேடா சயின்ஸ், விருச்சுவல் ரியாலிட்டி போன்ற பல துறைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews