தமிழகத்தில் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் – ஜூலை 17 முதல் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 14, 2021

Comments:0

தமிழகத்தில் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் – ஜூலை 17 முதல் விண்ணப்பிக்கலாம்

நாகர்கோவிலில் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் அடுத்த மாதம் நடக்க உள்ள நிலையில், இதற்கு ஜூலை 17ம் தேதி முதல் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலம் தெரிவித்துள்ளது.

ஆள் சேர்ப்பு முகாம்:

இந்திய ராணுவத்திற்கு நாடு முழுவதும் இருந்து அவ்வப்போது ஆள் சேர்க்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது செப்டம்பர் மாதம் நகர் கோவிலில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் அறிவித்துள்ளது. அதில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இந்திய ராணுவ ஆர் சேர்ப்பு முகாம் செப்டம்பர் 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்க இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த முகாமில் திருச்சி, கரூர், பெரம்பூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை போன்ற 16 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையத்தளத்தில் ஜூலை 17ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த முகாமில், சிப்பாய்கள், தொழில்நுட்ப பிரிவு, விமான போக்குவரத்து தொழில்நுட்ப பிரிவு சிப்பாய் போன்ற பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யபட இருக்கிறார்கள். விண்ணப்பித்தவர்களுக்கு செப்டம்பர் 6ம் தேதி முதல் நுழைவு சீட்டை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவு சீட்டுடன் திருச்சி ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகத்திற்கு சென்று டோக்கனை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த டோக்கன் இருந்தால் மட்டுமே நாகர் கோவில் முகாமில் கலந்து கொள்ளா முடியும். இது தொடர்பான சந்தேகங்களை திருச்சி ஆள் சேர்ப்பு அலுவலகத்தின் தோலை பேசி எண்களான 0431 -2412254 ல் தெரிந்து கொள்ளலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews