ஜூலை 15ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு முடிவு!
மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் ஜூலை 15ம் தேதி முதல் முதற்கட்டமாக 8 முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அறிவுறுத்தியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கடந்த ஓராண்டு காலமாக கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. வகுப்புகள் ஆன்லைன் மூலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் வறுமையில் வாட கூடிய மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் கல்வி என்பது எட்டாத கனியாக உள்ளது. இதனால் மாணவர்களின் கல்விநிலை கேள்விக் குறியாக உள்ளது. 2021-22 ம் ஆண்டின் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்கும் காரணத்தால் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது.
தற்போது கொரோனா தடுப்பூசிகள் மற்றும் தொடர் ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் வந்துள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களும் தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க மாநில அரசுகள் திட்டமிட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 15ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக 8 முதல் 12ம் வகுப்பு வரை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதலில் கொரோனா இல்லாத கிராமப்பகுதிகளில் பெற்றோர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்தின் அனுமதியுடன் பள்ளிகளை திறக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார். மேலும் அனைத்து பள்ளிகளும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள கொள்ள வேண்டும் எனவும் மாணவர்களின் நலனில் ஆசிரியர்கள் அக்கறை கொள்ள வேண்டும் எனவும் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.