ஜூலை மாதத்தில் 15 நாட்கள் வங்கி விடுமுறை – RBI பட்டியல் வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 03, 2021

Comments:0

ஜூலை மாதத்தில் 15 நாட்கள் வங்கி விடுமுறை – RBI பட்டியல் வெளியீடு!

இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் உள்ளிட்டவைகளுக்கு இந்த மாதம் 15 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இவற்றில் 9 நாட்கள் வரை மாநிலங்களுக்கான பொது விடுமுறையாகும்.

வங்கி விடுமுறைகள்
தற்போது துவங்கியுள்ள ஜூலை மாதத்தில் மொத்தம் 15 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்கள், சனிக்கிழமை உட்பட இந்த மாதத்தில் மொத்தம் 15 நாட்கள் விடுமுறை இருக்கும் என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 9 நாட்கள் மாநிலங்களுக்கான சிறப்பு விடுமுறைகள் ஆகும். இவற்றில் மத விடுமுறைகள் மற்றும் பண்டிகைகளும் அடங்கும். மீதமுள்ள 6 நாட்கள் வழக்கமான வார விடுமுறை நாட்களாகும்.

அந்த வகையில் ஜூலை 21 ஆம் தேதி பக்ரி ஐடியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு பொதுவான விடுமுறை அளிக்கப்படும். ரிசர்வ் வங்கி இந்த விடுமுறை நாட்களை, பேச்சுவார்த்தைக்குட்பட்ட கருவிகள் சட்டத்தின் கீழ் விடுமுறை (Holiday under Negotiable Instruments Act) என்ற வகையின் கீழ் பிரித்துள்ளது. அதன் படி ஜூலை மாதத்தில் 4, 11, 18, 25 உள்ளிட்ட நாட்கள் வார இறுதி நாட்களானதால் அந்த 4 நாட்களும் அனைத்து வங்கிகளுக்கான பொது விடுமுறை ஆகும். தொடர்ந்து 10 மற்றும் 24 உள்ளிட்ட 2 சனிக்கிழமைகளில் வார விடுமுறையாகும். மேலும் 12 ஜூலை, காங் மற்றும் ரத் யாத்திரையை ஒட்டி புவனேஸ்வர், இம்பால் பகுதிகளில் வங்கிகள் இயங்காது. 13 ஜூலை, பானு ஜெயந்தி மற்றும் 14 ஜூலை அன்று ட்ருக்பா செச்சி பண்டிகை நாளில் கேங்டாக் பகுதிகளில் வங்கிகள் இயங்காது. தவிர 16 ஜூலை அன்று ஹரேலா பூஜா காரணமாக டேராடூன் பகுதியில் வங்கிகள் செயல்படாது. 19 ஜூலை அன்று குரு ரிம்போசேவின் துங்கர் செச்சு காரணமாக கேங்டோக் பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ஜூலை அன்று பக்ரித் பண்டிகையை முன்னிட்டு ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், 21 ஈத் அல் ஆதா பண்டிகையை முன்னிட்டு ஐஸ்வால், புவனேஸ்வர், கேங்டாக், கொச்சி மற்றும் திருவனந்தபுரம் தவிர நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் செயல்படாது என ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது. அதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் வங்கிகளின் செயல்பாடுகளை கணித்து அதற்கேற்றவாறு வங்கி பணிகளை முடித்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews