பாரதியார் பல்கலை PG பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 26, 2021

Comments:0

பாரதியார் பல்கலை PG பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

பாரதியார் பல்கலையில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் வருகிற ஜூலை 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா அச்சம்
தமிழகத்தில் கொரோனா அச்சம் குறைந்து வரும் காரணத்தால் அனைத்து பல்கலையும் நிர்வாக பணிகளை தொடங்கி வருகிறது. இதையடுத்து கோவையில் உள்ள பாரதியார் பல்கலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2021- 22 ஆம் கல்வியாண்டில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் வருகிற ஜூலை 15ம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. தற்போது இதற்கான முழு விவரம் வெளியாகியுள்ளது. இது குறித்து பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தாவது, பாரதியார் பல்கலை துறைகளில் நடத்தப்படும் எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம்., எம்.சி.ஏ., எம்.எட்., எம்.பி.எட்., நூலக அறிவியல் உள்ளிட்ட முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், விண்ணப்பங்கள், தகவல் தொகுப்பேடு, மாணவர்களின் எண்ணிக்கை, கட்டணம், கல்வி உதவித்தொகை, விடுதி வசதிகள் உள்ளிட்ட தகவல்களை பல்கலை இணையதளத்தில் இருந்து வருகிற ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 15 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணம் ரூ.400 (எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு ரூ.200) செலுத்தி உரிய சான்றிதழ்களை இணைத்து ஜூலை 15ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட துறை தலைவருக்கு இணையம் மூலம் அனுப்ப வேண்டும். எம்.பி.ஏ., பாட திட்டத்துக்கான மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு மூலம் தனியாக நடத்தப்படும். முதுநிலை மாணவர்கள் சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு 0422-2428160, 2428161, 6385527291 எண்களை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews