தமிழகத்தில் கொரோனா தொற்றின் பதிப்பு காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண வைய்ப்பு நிதியாக ரூ.5 லட்சம் செலுத்துவது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.
அரசின் அறிவிப்புகள்:
தமிழகத்தில் கொரோனா 2ம் அலையின் காரணமாக பல ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்துள்ளோம். பல குழந்தைகள் தங்களின் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமே இழந்து தவித்து வருகின்றனர். அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நல்வாழ்விற்காக தமிழக அரசு ரூ.5 லட்சம் வைப்பு நிதியாக அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கில் செலுத்துவதாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பான விரிவான அரசின் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் அல்லது ஒருவரை இழந்த குழந்தையின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக ரூ.5 லட்சம் குழந்தையின் பெயரில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து டெபாசிட் செய்யப்படும். இந்த நிதியானது குழந்தையின் 18 வயது நிறைவடையும் போது அவர்களுக்கு வழங்கப்படும். அதுவரையிலும், அதற்கான வட்டி அவர்களுக்கு செலுத்தப்படும். இந்த குழந்தை மற்றும் பெற்றோரில் ஒருவர் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அரசின் இலவச வீடு போன்ற அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உட்பட அனைத்து செலவுகளும் அரசால் ஏற்றுக் கொள்ளப்படும். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கொரோனாவால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தையின் எஞ்சி இருக்கும் ஒருவருக்கு உடனடியாக ரூ.3 லட்சம் குழந்தையின் பெயரில் வழங்கப்படும். பெற்றோர் இருவரையும் இழந்து பாதுகாவலரின் பொறுப்பில் இருக்கும் குழந்தைகள், குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் அல்லது அரசு விடுதிகளில் சேர்க்கப்படாமல் இருந்தால் குழந்தை பராமரிப்பு நிதியாக மாதம் ரூ.3,000 அவர்களின் 18 வயது வரை வழங்கப்படும். பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கும் போது அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மாத பராமரிப்பு நிதியானது வங்கி சேமிப்பு கணக்கின் மூலம் செலுத்தப்படும் என்றும் அரசின் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.