பஸ் போக்குவரத்து இல்லாததால் 14-ந் தேதி முதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் உத்தரவை பரிசீலிக்க வேண்டும் - ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 10, 2021

1 Comments

பஸ் போக்குவரத்து இல்லாததால் 14-ந் தேதி முதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் உத்தரவை பரிசீலிக்க வேண்டும் - ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

பஸ் போக்குவரத்து இல்லாததால் 14-ந் தேதி முதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் உத்தரவை பரிசீலிக்க வேண்டும்
ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி, இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: வருகிற 14-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கிடையில் பள்ளிக்கல்விதுறை கமிஷனர், 14-ந் தேதி முதல் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை உள்ள அரசு மற்றும் அரசு நிதிநாடும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என உத்தரவு பிறப்பித் துள்ளார். ஊரடங்கு காரணமாக பஸ் போக்குவரத்து இல்லாத நிலையில் தொலைதூர பள்ளிகளுக்கு சென்றுவர முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வதானாலும் இ-பதிவு செய்ய வேண்டி உள்ளது. பல ஆசிரியர்கள் தங்களின் உறவினர் இறப்பு போன்ற காரியங்களுக்கு வெளியூர் சென்ற நிலையில் திரும்பி வருவதற்கு பஸ் இல்லாமல் தவிக்கின்றனர். மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று பணிபுரியும் ஆசிரியர்கள் இ-பாஸ் பெற பல சிரமங்களுக்கு ஆளாக்கப்படுவார்கள். பல ஆசிரியர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இறந்துள்ள னர். பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், பலர் அதில் இருந்து மீண்டு வந்தும் மனதளவில் பயம் கலந்த பாதிப்பில் உள்ளார்கள். எனவே ஊரடங்கில் பலதளர்கள் அறிவிக்கப்பட்டு பஸ், ரெயில்கள் முழுமையாக இயங்கும் வரை பள்ளி கல்வி கமிஷனரின் இந்த உத்தரவை பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

1 comment:

  1. சாப்பிட ஊறுகாய் இல்லாத காரணத்தினால் , ஆசிரியர்களுக்கு பள்ளிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்....!

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews