மத்திய அரசின் கல்வி நிறுவனமான பெங்களூர் IISC ல் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க மே 31ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (IISC) கல்வி நிறுவனம் பெங்களூரில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெறுகிறது. அதன் படி பேச்சுலர் ஆப் சயின்ஸ் (4 ஆண்டுகள்) பிரிவில் பயாலஜி, கெமிஸ்ட்ரி, என்விரான்மெண்டல் சயின்ஸ், மெட்டீரியல்ஸ், மேத்தமெடிக்ஸ் மற்றும் பிசிக்ஸ் ஆகிய பாடங்களுக்கு மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
இந்த படிப்புகளுக்கு 120 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த கல்லூரியில் சேர்ந்து பயில வேண்டுமானால் +2 வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களைத் தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். மேலும் அந்த பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக தேசிய தகுதித் தேர்வுகளான KVBY, IIT, JEE, NEET – UG போன்ற நுழைவுத்தேர்வுகளை எழுதியிருக்க வேண்டும். மேலும் OBC, SC, ST மாணவர்களுக்கு இடஒதுக்கீடு உண்டு. தகுதித்தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே கல்லூரியில் சேர்க்கை வழங்கப்படும். கூடுதலாக தகுதியுடைய மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகைகளும் வழங்கப்படுகிறது. இந்த படிப்புகளுக்கு www.iisc.ac.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். இதற்கான இறுதி நாள் மே 31 என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.