கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி சி.பி.எஸ். ரத்து செய்யப்ப டும் அறிவிப்பு வெளியாக உள்ளதாக, அரசுஊழியர்கள் மத்தியில் பரபரப்பு தகவல் கள் வெளியாகி கொண்டி ருக்கிறது. இந்த தகவல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தி.மு.க., தேர்தல் அறிக் கையில் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் சி.பி.எஸ். திட் டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியம் திட் டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டி ருந்தது.
கடந்த 2003ம் ஆண் டுக்கு பின்னர் சி.பி.எஸ். திட்டம் இருப்பதால் ஒட்டுமொத்த அரசு ஊழி யர்களும் பழைய ஓய்வூ திய திட்டத்தை செயல் படுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராடி வரு கின்றனர். அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள் போராட் டத்தில் பிரதான கோரிக்கை யாக, இந்த கோரிக்கைதான் டம் பெற்று வந்தது.
இந்நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல் வராக பதவி ஏற்றவுடன்
தேர்தல் அறிக்கையில் உள்ள கோரிக்கைகள் ஐந் தினை நிறைவேற்ற, முதல் உத்தரவில் கையெழுத்திட் டார்.
அதில் ஒரு திட்டமான, அரசு டவுன்பஸ்களில் பெண்கள் இலவசமாக செல்லும் திட்டம் நேற்று அமலுக்கு வந்து, மக ளிர் மத்தியில் கடும் வர வேற்பை பெற்றது.
இந்நிலையில், நேற்று க அனைத்து அரசு ஊழியர் த கள், ஆசிரியர்கள் சங்கங்க ளின் வாட்ஸ் ஆப்பில் பிர தான செய்தியாக அடுத்த மாதம் (ஜூன்) 3ம் தேதி மறைந்த முன்னாள் முதல் வர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று அரசு ஊழியர் கள், ஆசிரியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சி.பி. எஸ். திட்டம் ரத்து செய்யப் படுகிறது என்கிற அறிவிப் பினை, முதல்வர்ஸ்டாலின் வெளியிட உள்ளதாக தக வல் பரவி வருகிறது.
மிகவும் நம்பத்தகுந்த தகவலின் படி இந்த செய்தி வெளியாகி இருப்பதாக அதில் உறுதி தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த செய்தி அரசு ஊழியர்கள், ஆசி ரியர்கள் மத்தியில் கடும் மகிழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது.
Search This Blog
Monday, May 10, 2021
Comments:0
Home
ASSOCIATION
CPS
TEACHERS
CPS ஜூன் 3ல் ரத்தா...?? சங்கங்களின் வாட்ஸ் ஆப்பில் பரபரப்பு - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குஷி!
CPS ஜூன் 3ல் ரத்தா...?? சங்கங்களின் வாட்ஸ் ஆப்பில் பரபரப்பு - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குஷி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.