பிளஸ் 2 திருப்புதல் தேர்வு நடைமுறை தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 15, 2021

Comments:0

பிளஸ் 2 திருப்புதல் தேர்வு நடைமுறை தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தொடர்பாக தலைமை யாசிரியர்களுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களை பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் பள்ளித் தலைமையா சிரியர்களுக்கு வழங்கப்பட் டுள்ள அறிவுறுத்தல்கள் விவரம் : பிளஸ் 2 வகுப்புக்கான திருப் புதல் தேர்வுகள் , முதன்மைக் கல்வி அலுவலகம் தயாரிக் கும் வினாத்தாள் , தேர்வுக்கால அட்டவணை அடிப்படை யில் தான் நடைபெற வேண்டும். தேர்வு வினாத்தாள்களை கட்செவி அஞ்சல் செயலி வழி யாக மாணவர்களுக்கு அனுப்ப வேண்டும் . இதற்காக பாடவாரியாக பிரத்யேக வாட்ஸ் ஆப் குழு ஆசிரியர் தலைமையில் உரு வாக்கப்பட்டு , அதில் வினாத் தாளை பதிவேற்ற வேண்டும் . அதிலிருந்து வினாத்தாள்க ளைப்பதிவிறக்கம் செய்து பெற் றோர் முன்னிலையில் மாண வர்கள் தேர்வெழுத வேண்டும். தேர்வு முடிந்தபின் விடைத் தாள்களில் பெற்றோரி டம் கையொப்பம் பெற்று , அவற்றை ஸ்கேன் செய்து ஆசி ரியருக்கு அனுப்ப மாணவர்க ளுக்கு அறிவுறுத்த வேண்டும் . அதேபோல் , விடைத்தாள்க ளின் அசல் பிரதிகளை மாணவர்கள் வீட்டிலேயே பாதுகாப் பாக வைத்திருக்க வேண்டும் . ஆசிரியர்கள் வாட்ஸ் ஆப் மூலம் பெறப்பட்ட விடைத் தாள்களை திருத்தம் செய்து , மதிப்பெண்கள் வழங்க வேண் டும் . இந்தபணிகளை ஜூன் மாதத் துக்குள் முடித்து , அதுகுறித்த அறிக்கையை மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews