UPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 363 Principal காலிப்பணியிடங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 24, 2021

Comments:0

UPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 363 Principal காலிப்பணியிடங்கள்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) இருந்து மத்திய கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Principal பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம். மத்திய அரசு வேலைவாய்ப்பு :
மொத்தமாக 363 Principal காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண் பதிவாளர்களுக்கான காலியிடங்கள் – 208
பெண் பதிவாளர்களுக்கான காலியிடங்கள் – 155
Principal வயது வரம்பு :
13.05.2021 தேதியில் அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். UPSC கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் இளநிலை/ முதுநிலை/ கல்வியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
UPSC தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview/ Test மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 13.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். UPSC Job Notification PDF 2021
Apply Online

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews