Breaking

Wednesday, April 28, 2021

ஆசிரியர்களை கல்லூரிக்கு வர நிர்பந்திக்கக்கூடாது - கல்லூரிக்கல்வி இயக்குநர்

தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் எக்காரணத்தைக் கொண்டும் பேராசிரியர்களை வரவழைக்கக் கூடாது என்று அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும், கல்லூரி கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்று முன்பைவிட தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது
பேராசிரியர்களை எக்காரணத்தை கொண்டும் கல்லூரிக்கு நேரில் வர வழைக் க கூடாது என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புக்காக பேராசிரியர்களை கல்லூரிக்கு வரவழைப்பதாக புகார் எழுந்த நிலையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து கலை, அறிவியல் கல்லூரியில் நிர்வாகிகளுக்கும் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா அதிகரிப்பதால் ஆன்லைன் வகுப்புகள் வீட்டிலிருந்தபடியே நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.NAAC சார்ந்த பணிகள் மற்றும் கல்லூரி சார்ந்த பணிகளுக்காகவும் ஆசிரியர்களை வரவழைக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog