ஆசிரியர்களுக்கு குடியிருப்பு கட்ட இடம் தேர்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி 2021-2022ம் ஆண்டுக்கான திட்டமிடலில் ஆசிரியர்களுக்கான குடியிருப்பு கட்டமைப்புக்கு தேவையான முன்மொழிவுகள் மத்திய அரசால் கோரப்பட்டுள்ளது.
பல்கலை, கல்லூரிகள் ஆன்லைனில் தேர்வு அரசாணை வெளியீடு
எனவே ஆசிரியர்களுக்கு குடியிருப்பு கட்டமைப்பிற்கு மாவட்டங்களில் இருந்து கருத்துருக்கள் பெறப்பட்டு தங்கள் நிலையில் ஆய்வு செய்து உரிய குறிப்புரைகள் மற்றும் இணைப்புகளுடன் மத்ய அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பிவைக்க வேண்டும். இடம் தேர்வு செய்யும் போது மலை பகுதிகள் மற்றும் போக்குவரத்து வசதியற்ற தொலைதூர பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலும் விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Search This Blog
Wednesday, April 21, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.